இந்த வீடியோவில் : முதலமைச்சர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? முதலமைச்சருக்கான தகுதிகள் என்ன ? முதலமைச்சர் மாநிலத்தின் ஆளுநரால் தேர்நதெடுக்கப்படுகிறார் . பொதுத்தேர்தலில் வென்று பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் உறுப்பினர்களால் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்தியமான ஒருவரை அக்கட்சியிலிருந்து தேர்வு செய்கின்றனர் . அப்படி தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார் . பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் உறுப்பினர்தான் முதலமைச்சர் ஆகவேண்டுமென்பதில்லை . சட்டமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கையை யார் பெருகிறாரோ அவரும் முதலமைச்சராக முடியும் . சில நேரங்களில் சட்டமன்ற உறுப்பினரல்லாதவரும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் , அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் முதலமைச்சர் 6 மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகிவிட வேண்டும் . முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி வேண்டுமோ அதுவே போதுமானது . -~-~~-~~~-~~-~- Please watch: "நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன ? / What if a no confidence motion ?" https://www.youtube.com/watch?v=oeWouALNLYc -~-~~-~~~-~~-~- இந்த சேனல் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் , மக்கள் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அரசியல் மற்றும் அதைச்சார்ந்த தகவல்களை எளிய முறையில் வழங்கும் , ஒரு நேர்மையான எந்த கட்சியின் ஈடுபாடும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த சேனலாகும் . இதன் மூல நோக்கம் தமிழ் மக்கள் அரசியல் அறியாமையிலிருந்து வெளிவர வேண்டுமென்பதேயாகும் . மேலும் இது போன்ற தகவல்கள் மூலம் அரசியல் அறிவினை வளர்த்திட இணைந்திருங்கள் தமிழ் அரசியல் களஞ்சியம் சேனலுடன் . நன்றி