சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? How is the legislature Selected ?இந்த வீடியோவில் சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? இந்திய குடியுரிமை மற்றும் 25 வயது பூர்த்தி அடைந்த ஒரு நபர் எந்த மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம் . அவர் அந்த மாநிலத்தின் எதாவது ஒரு தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும் . இந்த தகுதியிருப்பின் வேட்புமனுவை பூர்த்தி செய்து அதனுடன் 10 ,௦௦௦ ரூபாய் வைப்புத்தொகையையும் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் . அவர் அந்த மனுவை தேர்தல் சட்டத்தின் கீழ் பரிசீலனை செய்து வேட்பாளரை ஏற்கவோ நீக்கவோ செய்வார் .. இந்த பரிசீலனையின் முடிவில் அந்த தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க மட்டுமே பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் . வாக்கெடுப்பு முடிந்தவுடன் அந்தந்த வேட்பாளர் அல்லது அவரின் முகவர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்கக்கூடிய வேட்பாளர் அந்த சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் . அரசு ஊழியர் , அரசுடன் ஏதேனும் வியாபாரத்தில் ஒப்பந்தத்தில் இருப்பவர் , வேறு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் , ஏதேனும் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் ஆகியோர் போட்டியிட முடியாது .